மரண அறிவிப்பு

பிறப்பு 1945-03-21
Image
இறப்பு 2024-09-29

வைத்திலிங்கம் தில்லைநடராஜன் (ஓய்வு பெற்ற நில அளவையாளர், Geographic Information Systems(GIS) Consultant)

யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற நில அளவையாளர், Geographic Information Systems (GIS) Consultant திரு. வைத்திலிங்கம் தில்லைநடராஜன் அவர்கள் 29-09-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், கனகாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், சிவானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற யோகராணி (புஸ்பம்) அவர்களின் பாசமிகு கணவரும், சுபோதினி (லண்டன்), பாமினி (லண்டன்), அஜந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறிஸ்கந்தராஜா (லண்டன்), மனோகரன் (லண்டன்), ஜெயராணி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், வசந்தநாயகி (சாவகச்சேரி), பத்மசேனன் (கனடா), காலஞ்சென்ற மனோகரி (சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற ராஜசங்கரி, மற்றும் தங்கராணி (கனடா), காலஞ்சென்ற மகாதேவன், காலஞ்சென்ற ஆனந்தநடேசன் -சுகுனாம்பிகை (கனடா), விமலாராணி சண்முகதேவன் (நீர்வேலி), காலஞ்சென்ற இந்திராணி -சுகுணானாந்தன் (கனடா), ஜெயராணி - உமாபதிசிவம் (ஜேர்மனி), அருமைநாதன் -கிருபானந்தி (கனடா), இராசேந்திரம்-சரோஜினிதேவி (ஜேர்மனி), செல்வராணி - பாலசிங்கம் (நீர்வேலி), பத்மராணி- குகராஜன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், செந்தில்குமார், ஜானகி, முரளினி-முரளிதரன், நடனதேவன்-தீபா, துவாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், உஷா, கோபகன் ஆகியோரின் அன்பு அன்பு பெரியப்பாவும், சாருஜன், கிருஜன், தீபனா, தீபிகா, சாரங்கன், சிறிரங்கன், அபிஷா, கோகிலவதனன், கோகில்ராஜ், விதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-10-2024ம் திகதி வியாழக்கிழமை இலக்கம் 3 கற்குழி ஒழுங்கை, தபாற்கந்தோர் விதி, சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10:00 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். தகவல்:- குடும்பத்தினர்

வயது 79

சாவகச்சேரியில் , Sri Lanka

கண்ணீர் அஞ்சலிகள்
Tributes
0
அண்ணாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் துயரினை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்

Tributes

No Tributes Found